அறநிலையத்துறையின் ஓர் அறிக்கை பரபரப்பானது. குறிப்பாக, பா.ஜ.க. தரப்பிலிருந்து கண்டனக் குரல்கள் வெளிப்பட்டன. தமிழ்நாடு பிராமணர் சங்கம் இந்த அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியது. அந்த அறிக்கை, திருவரங்கம் ஜீயர் நியமன விவகாரம் தொடர்பான இந்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப் பட்டதாகும்.
கோவில் நிர்வாகத்தையும் கோவில் தொடர்பான சொத்து களையும் பராமரிக்க வேண்டியது மட்டுமே அறநிலையத்துறையின் வேலை. ஜீயர் என்ற தலைமை பீடத்தை நியமிப்பதற்கு அதிகாரம் இல்லை. சர்ச் ஃபாதரை, பிஷப்பை இப்படி நியமிக்க முடியுமா எனக் கேள்விகள் எழுந்தன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jeeyar.jpg)
ஜீயர் நியமன விவகாரத்தில் தமிழக அரசு இதுவரையில்லாத புதிய நடைமுறை எதனையும் கொண்டுவந்திருக்கிறதா அல்லது இந்து சமய விரோதமாக புதிய நடைமுறை எதனையும் அறிமுகம் செய்கிறதா என்பது குறித்து விரிவாக அலசியுள்ளார் சமூக ஆர்வலர் சுந்தரராஜன்.
"திருவரங்கம் ஜீயர் பொறுப்புக்கு ஆட்கள் தேவை என அக்கோவிலின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டதற்கு சில குழுக்களும் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்... இதுவரை திருவரங்கம் கோவில் ஜீயர் எவ்விதம் நியமனம் செய்யப்பட்டார், எவ்வித நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதைப் பார்ப்போம்.
திருவரங்கம் ஜீயர் பணிக்கு என சில தகுதிகள் உள்ளன. அந்த தகுதிகள் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் இந்தப் பணி தென்கலை ஐயங்கார்களுக்கு உரியது. வடகலையார்களோ, மாத்வ பிராமணர்களோ, ஸ்மார்த்தர்களோ விண்ணப்பிக்க முடியாது.
1911-லிருந்து இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது. 2018-ல் ஜீயர் பொறுப்பு காலியானது. அந்த பொறுப்புக்கு இப்போது ஆள் தேடுகிறார்கள். அதை ஸ்மார்த்த பிராமண வகுப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுத் தடுக்க நினைப்பது ஏன்?
இந்த பதவிக்கு வர தென்கலை ஐய்யங்காராக இருக்கவேண்டும்; நாலாயிர திவ்ய பிரபந்தம் கற்றுணர்ந்தவராக வேண்டும்; தனது குடும்ப உறவுகளைத் துண்டித்தவராகவும், துண்டிக்க உறுதி தருபவராகவும் இருத்தல் வேண்டும்; வைணவ வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள், பூசை முறைகள், அறிந்தவராக இருத்தல் அவசியம்.
ஒருவர் ஜீயரானதும் அவர் வசிப்பதற்கு கோவிலின் சார்பில் வீடு தரப்படும் அங்கேயே ஜீயர் தங்கிக்கொள்வார். அங்கு பிரபந்தப் பாடம் சொல்லித் தரப்படும். அவருக்கு மாதம் சிறிது ரொக்கமும், ஆராதனையில் பங்கும் தரப்படும். ஆகவே அவர் கோவிலின் ஊழியர்தான். ஒரு ஜீயர் மறைவுக்குப் பிறகு அடுத்த ஜீயரை எப்படி தேர்வு செய்வது?
சிவ மடங்களில் ஆதீனமே இளைய ஆதீனத்தை நியமிப்பார். மூத்த ஆதீனம் இறந்தால், இளைய ஆதீனம் பட்டத்திற்கு வருவார். இதில் அரசு தலையிடாது. ஆனால் ஜீயர் விஷயத்தில் இத்தகைய ஏற்பாடுகள் இல்லை. ஆகையால் ஒரு ஜீயர் மரணித்தால் அடுத்த ஜீயரை அரசுதான் நியமிக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jeeyar1.jpg)
ஒருவர் ஜீயராக இருக்கத் தகுதியான வரா என்பதை திருவரங்கத்தில் உள்ள தென்னாச் சார்ய சம்ப்ரதாய சம்ப்ரக்ஷ்ண சபா தங்களது பொதுக் குழுவைக் கூட்டி விவாதித்து பரிந்துரைக்கும். இவர்கள் பரிந்துரைப்பதை கோவில் அறங்காவலர்கள் குழு தீர்மானமாக்கும். இதனை அரசின் பிரதிநிதி அறநிலையத் துறைக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவார் . 1914-ல் இந்த சபா தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுதான் வழக்கம். இந்த தென்னாச்சார்ய சபாவில் தமிழை, பெருமாள் பேசிய அருளிப்பாடாகக் கருதும் வைணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். வைணவர்களில் ரெட்டியார், செட்டியார், யாதவர் கள்ளர், அம்பலக்காரர், நாயக்கர், நாயுடு ஐயங்கார், சாத்தாத வைணவர் எனப் பலரும் உள்ளனர். பாகவதர்களை உள்ளடக்கிய இந்த சபா தரும் நபரை ஜீயராக நியமிப்பதால் ஒட்டுமொத்த வைணவமும் ஜீயரை அங்கீகரித்ததாகிறது.
இதற்கு முன்னர் 1945, 1980, 1990-ஆம் ஆண்டுகளில் ஜீயர்கள் நியமனமாகியுள்ளனர். அப்போதெல்லாம் ஜீயர் நியமனத்திற்கு விளம்பரம் செய்து விண்ணப்பம் கேட்டுள்ளனர். ஜீயர்களுக்கும் துறைக்கும் பல வழக்குகள் நடந்துள்ளன. அனைத்து வழக்குகளிலும் ஜீயர்கள் கோவிலின் ஊழியர் என தீர்ப்பாகியுள்ளது. இவர் தனது கைங்கர்யத்தை சரியாகச் செய்யவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படலாம்'' என்று விரிவாக விளக்குகிறார்.
இருப்பினும், ஜீயர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் கோரிய அறநிலையத்துறை அறிக்கைக்கு இப்போது எதிர்ப்பு ஏற்பட்டிருப்பது ஏன்? புதிய அரசு உருவாகியிருக்கிறது. இந்த அரசை இந்து விரோத அரசாகக் கட்டமைக்க முயலும் சில அரசியல் சக்திகள் இந்த விவகாரத்தைக் கையிலெடுத் திருக்கிறார்கள். இதற்கு ஸ்தலத்தார் என்பவர்களும் துணைபோகிறார்கள். இப்போது அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்தார்தான் தமிழை நீசமொழி என்பவர்கள். அவர்கள் ஏன் இதில் தலையிட வேண்டும்? என்கிறார்கள் தமிழ்ப் பற்றுகொண்ட வைணவர்கள்.
ஜீயரை நியமிக்கத் தகுதிவாய்ந்தது தமிழ் வைணவர்கள் நிரம்பிய தென்னாச்சார்ய சம்ப்ரதாய சம்ப்ரக்ஷ்ண சபாதான். இந்து அறநிலையத்துறையின் அறிக்கையின்படி, தகுதியுள்ளவரை ஜீயராகப் பரிந்துரைத்து நியமிக்கும் பொறுப்பு இந்த சபையிடம் தான் உள்ளது. மற்றதெல்லாம் வழக்கமான அரசியல்.
-கீரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/jeeyar-t.jpg)